Aran Sei

அசாமில் ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு முன்பாக கொரோனா தொற்று இல்லை – அரசின் அதிகாரப்பூர்வ தகவலுக்கு முரணாக பேசும் சுகாதார அமைச்சர்

சாம் மாநில சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ தகவலுக்கு முரணாக, ஏப்ரல் 6 வரை மாநிலத்தில் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என அம்மாநில சுகாதார அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மே 1 ஆம் தேதிவரை அசாம் மாநிலத்தில் இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அசாம் அரசின் இந்த முடிவைத் தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு விமர்சகரும் மருத்துவருமான சுமந்த சி ராமன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், அசாம் சுகாதார துறை அமைச்சரை டெக் செய்து கொரோனாவே இல்லை, மாஸ்க் அணிய தேவையில்லை என கூறிவந்த அரசு, தற்போது இரவு ஊரடங்கை விதித்துள்ளது என பதிவிட்டிருந்தார்.

தமிழகத்தில் அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை: அபாயக்கட்டத்தை நெருங்குவதாக சு.வெங்கடேசன் எச்சரிக்கை

இதற்குப் பதிலளித்துள்ள அசாம் சுகாதார அமைச்சர், ”உண்மைதான் ஏப்ரல் 6 ஆம் தேதிவரை அசாமில் கொரோனா தொற்று இல்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும், தி லேட்டன்டாப் என்ற இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், ”ஏப்ரல் மாதம்வரை அசாமில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. இதனால் மாஸ்க் அணிய தேவை இல்லை. சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகும் அசாமில் தொற்று இல்லை. ரோங்காலி பிஹூ திருவிழாவைக் கொண்டாடுவதற்கு மாநிலம் தயாராகி வருகிறது. ஒருவேளை மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து, மாஸ்க் அணிய வேண்டிய நிலை வந்தால், நான் மக்களுக்குத் தெரிவிப்பேன்” என அமைச்சர் கூறியிருந்தார்.

போலி செய்தியைப் பரப்பிய இந்துத்துவவாதிகள் : உண்மையை உடைத்த சின்மயி

இந்நிலையில், கொரோனா பாதிப்புகள்குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கைகளோ வேறு விதமான தகவல்களைத் தெரிவிக்கின்றன.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதிவரை அசாம் மாநிலத்தில் 2,6234 பேர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் அதே காலகட்டத்தில் 66 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Source : PTI

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்