Aran Sei

தொழுகையை எதிர்த்த இந்துத்துவாவினர் – நடவடிக்கை எடுக்காத ஹரியானா அதிகாரிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

ரியானாவில் உள்ள குருகிராமில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தக் கூடாது என இந்துத்துவ அமைப்பினர் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்துத்துவவாதிகளின் இந்த அச்சுறுத்தலை ஹரியானா மாநில அதிகாரிகள் கட்டப்படுத்தாமல் இருந்ததைக் குறிப்பிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அதீப் தாக்கல் மனுவை உடனடியாக விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா உத்தரவிட்டுள்ளார்.

வகுப்புவாத அச்சுறுத்தல் நடைபெறும் பொழுது அதிகாரிகள் அமைதியாக இருந்து அதனை வேடிக்கை பார்க்கக் கூடாது. வகுப்புவாத வெறுப்பு குற்றங்களுக்கு எதிராகச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற 2018 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந்த மனு கோடிட்டுக் காட்டியுள்ளது.

ஹரியானா தலைமைச் செயலாளர் மற்றும் ஹரியானா காவல்துறை தலைமை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனு கோரியுள்ளது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்