Aran Sei

உண்மை இருக்கும் இடத்தில் காந்தி இருப்பார் – ராகுல் காந்தி

ரு ‘இந்துத்துவவாதி’ காந்திஜியைச் சுட்டுக் கொன்றார். அனைத்து ‘இந்துத்துவவாதிகளும்’ காந்திஜி இப்போது இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை இருக்கும் இடத்தில் காந்தி இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் காந்தி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவில் காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.

“நான் எப்போது எல்லாம் விரக்தியடைகிறேனோ அப்போதெல்லாம் ​​​​உண்மை மற்றும் அன்பின் வழியே வரலாற்றில் எங்கும் வெற்றி பெற்றதை நான் நினைத்துப் பார்க்கிறேன். கொடுங்கோலர்களும் கொலைகாரர்களும் ஒரு காலத்தில் வெல்ல முடியாதவர்களாக நமக்குத் தோன்றலாம், ஆனால் இறுதியில் அவர்கள் எப்போதுமே தோல்வியே அடைந்திருக்கிறார்கள். அதை எப்போதுமே நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.” என்ற காந்தியின் மேற்கோளை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“தேசத்தந்தையின் நினைவுநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்” என்று காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கூறியுள்ளது.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்