Aran Sei

உ.பி: ஷாஹி இத்கா மசூதியை இந்துத்துவத்தினர் உரிமை கோரிய மனு – விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்பு

த்தரபிரதேசத்தில் உள்ள ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டுள்ள நிலத்தின் உரிமையைக் கோரி ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளை மற்றும் பிற தனியார் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை மதுராவில் உள்ள மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கச் சம்மதித்துள்ளது.

மதுராவில் கிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் இடத்தில் உள்ள கேசவ் தேவ் கோயிலை கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தாவும், அதன் அருகில் உள்ள மசூதியை ஷாஹி ஈத்கா நிர்வாகக் குழுவும் நிர்வகித்து வருகின்றன. கிருஷ்ணஜன்ம பூமி என்று சொல்லப்படுகின்ற நிலத்தின் மொத்தப் பரப்பளவு 13.37 ஏக்கர் ஆகும்.

குதுப்மினார் கோபுரத்தை இஸ்லாமிய மன்னர் கட்டவில்லை: விக்ரமாதித்யா மன்னர்தான் கட்டினார் என தொல்லியல் துறையின் முன்னாள் அதிகாரி கருத்து

1968-ம் ஆண்டில், கோயிலும் மசூதியும் அருகருகில் இருப்பதால் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இவ்விரு அமைப்புகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் தற்போதும் செயல்பாட்டில் உள்ளது.

இச்சூழலில் அந்த ஒப்பந்தம் தவறான காரணங்களுக்காக போடப்பட்டதாக கூறி அயோத்தி வழக்கின் தீர்ப்பிற்கு பின் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கிருஷ்ணஜன்ம பூமியில் இருந்து ஷாஹி ஈத்கா மசூதியை அகற்றக் கோரிய மனுவை மதுரா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

கியானவாபி மசூதி விவகாரம் – ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது ஆய்வுக்குழு

வழக்கறிஞர் ரஞ்சனா அக்னிஹோத்ரி உள்ளிட்ட ஆறு பேர் சேர்ந்து கடந்த ஆண்டு கீழமை நீதிமன்றத்தில் ஷாஹி ஈத்கா மசூதியை அகற்றக் கோரி மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் எவரும் மதுராவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் அம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: The Indian Express

காசி ஆனந்தனின் தியாகத்தை கொச்சை படுத்த முடியாது | Thiruma Speech

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்