மகாத்மா காந்தியை அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட இந்துத்துவ தலைவர் காளிசரண் மகாராஜுக்கு தானே நீதிமன்றம் நேற்று (ஜனவரி 27) பிணை வழங்கியுள்ளது.
2021 டிசம்பர் 26 அன்று சத்தீஸ்கர் தலைநகர் தானேவில் நடைபெற்ற மாநாடு மற்றும் மகாராஷ்டிராவில் ராய்பூரில் நடந்த நிகழ்வின் போது மகாத்மா காந்தி பற்றி அவதூறாகப் பேசியதாக இந்துத்துவ தலைவர் காளிசரண் மகாராஜ் மீது என்சிபி தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான ஜிதேந்திர அவாத் அளித்த புகாரின் அடிப்படையில் ராய்ப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சீனா ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்பது எப்போது? – ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் காளிசரண் மகாராஜை 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க தானே நீதிமன்றம் ஜனவரி 21-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.