Aran Sei

குருகிராமில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த எதிர்ப்பு தெரிவித்த இந்துத்துவவாதிகள் – ‘ஜெய்ஸ்ரீராம்’ முழக்கம் எழுப்பி போராட்டம்

ண்டிகரில் உள்ள குருகிராமில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜும்மா மசூதியில் தொழுகை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்துத்துவவாதிகள்  நடத்தும்  போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உள்ளூர்வாசிகள் மற்றும் வலது சாரி அமைப்புகள் கடந்த நான்கு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். குருகிராம் நிர்வாகம் திங்களன்று இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று வலது சாரிகளைச் சமாதானப்படுத்தியது. ஆனால், இன்று, இஸ்லாமியர்கள் தொழுகையின்போது போராட்டக்காரர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கங்களை எழுப்பியதால் போராட்டம் வெடித்துள்ளது.

செக்டார் 12-ஏ மைதானம் தனியாருக்குச் சொந்தமானது என்றும், அதனால் அதை வழிபாட்டிற்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் போராட்டக்காரர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை சீர்குலைந்ததால், ஹரியானா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியபோது, ​​போராட்டக்காரர்கள் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘எல்லைப் பாதுகாப்பு படைக்கான அதிகார நீட்டிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்’ – பிரதமருக்கு பஞ்சாப் முதலமைச்சர் கோரிக்கை

காவல்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் ”உங்களின்அச்சம் தொடர்பாக நிர்வாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும்” என்று கூறியுள்ளனர். தொழுகையின்போது அதிக அளவில் கூட்டம் கூடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொது இடத்தில் தொழுகை நடத்தப்படும்போது உள்ளூர்வாசிகளின் நடமாட்டமும் தடைபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நான்கு வாரங்களாக போராட்டம் நடைபெற்றப்பிறகு, செக்டார் 47ல் வசிப்பவர்களையும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் சந்தித்த காவல் துணை ஆணையர், இப்பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வுக்கு உறுதியளித்த பின்னர், வரும் திங்கட்கிழமையிலிருந்து இரண்டு வாரங்களுக்குத் தங்கள் போராட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

லக்கிம்பூர் வன்முறை: ஒன்றிய அரசின் இணையமைச்சரை கைது செய்யக் கோரி அக்டோபர் 26 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம்

போராட்டத்தின் தலைவர் குல்பூஷண் பரத்வாஜ், “மூன்று மீட்டர் தொலைவில் அரசுக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அந்த நிலத்தை நிர்வாகம் கொடுக்கலாம். தொழுகை நடத்த வருபவர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல. இந்த இடங்களை நிரந்தர தொழுகை தலங்களாக ஆக்கிவிட்டனர்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பொது இடங்களில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவது சர்ச்சையை ஏற்படுத்தியது, பின்னர் காவல்துறையும் உள்ளூர் நிர்வாகமும் 37 இடங்களில் தொழுகைக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை அடையாளம் கண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குருகிராமில் பல்வாறு துன்புறுத்தப்படுவதாகக் கூறியுள்ளனர்.

Source: newindianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்