Aran Sei

இஸ்லாமியர்களைக் கொல்ல அழைப்பு விடுத்த இந்துத்துவவாதிகள் – உபா சட்டத்தில் கைது செய்ய காவல்துறை மறுப்பு

ரித்வாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட மத நிகழ்வு தொடர்பாக உத்தரகாண்ட் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. பின்னர் காணொளிகள் எல்லாம் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டதாக  மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

வாசிம் ரிஸ்வி என்ற ஜிதேந்திர நாராயண் தியாகியை குற்றம் சாட்டப்பட்டதாக  உள்ளூர்கார்ர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம்  பிரிவு 153 ஏ (மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) கீழ் காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும்.

தேர்தல் கூட்டணிக்காக இணையும் பஞ்சாப் விவசாய சங்கங்கள் – ஆம்ஆத்மியோடு கூட்டணியா?

லேசான பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது என்று கூறுவதை காவல்துறை இயக்குநர் அசோக் குமார் மறுத்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம்  பிரிவு 153 ஏ பிரிவிவை பயன்படுத்தியுள்ளோம். நாங்கள் சட்டப்படி செய்ய வேண்டும்.  இந்த நிகழ்வு வன்முறை அல்லது கொலைக்கு வழிவகுக்கவில்லை என்பதால் உபா (UAPA) சட்டத்தின்  கீழ் வழக்குப் பதிய முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் வாள் மற்றும் திரிசூலத்தை ஏந்தியிருந்தது குறித்து கேட்டதற்கு, “அவை பாரம்பரிய விஷயங்கள். அவர்கள் எந்த ஆயுதத்தையும் வாங்கவில்லை, எந்த ஆயுத தொழிற்சாலையையும் கண்டுபிடிக்கவில்லை” என்று காவல்துறை இயக்குநர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

இந்து இளைஞர்களை  விடுதலைப் புலிகள் பிரபாகரனாக மாறி  இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்று யதி நரசிங்கானந்த் கூறியிருந்தார்.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. நரசிங்கானந்த் மற்றும் காணொளியில் காணப்படும் மற்றவர்களை சட்டப்படி விசாரணைக்கு அழைக்க இருப்பதாகவும் காவல்துறை இயக்குநர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் பசுக்கள் மீது பாசம் கொள்ளும் மோடி – காங்கிரஸ் விமர்சனம்

யதி நரசிங்கானந்த் மீது பல்வேறு வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இவ்வாண்டின் தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முகமது நபி குறித்து அவர் பேசிய கருத்துக்களுக்காக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: The Hindu

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்