Aran Sei

ஹரியானாவில் இயேசு சிலையை உடைத்த இந்துத்துவாவினர் – காவல்துறை வழக்குப் பதிவு

ரியானாவில் கிறிஸ்துமஸ்க்கு அடுத்தநாள் பழைமையான புனித ரிடீமர் தேவாலயத்தில் இருந்த கிறிஸ்துவின் சிலை உடைக்கப்பட்டது.

ஹரியானா மாநிலம் அப்பாலாவில் உள்ள ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த புனித ரிடீமர் தேவாலயத்தில் இருந்த கிறிஸ்துவின் சிலை டிசம்பர் 26 ஆம் தேதி அதிகாலையில் அடையாளம் தெரியாத 2 ஆண்களால் உடைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவாலய வளாகத்தில் உள்ள விளக்குகளையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

சிறுபான்மையினரையும் காந்தியையும் இழிவு படுத்திய இந்துத்துவ தலைவர் – காவல்துறை வழக்குப் பதிவு

புனித ரிடீமர் தேவாலயத்தின் பாதிரியார் பட்ராஸ் முண்டு கொடுத்த புகாரின் பேரில் அத்துமீறி நுழைந்து வழிபாட்டுத் தலத்தை அசுத்தப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த இருவர் மீதும் காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.

“டிசம்பர் 26 ஆம் தேதி நள்ளிரவு 12.30 முதல் 1.40 மணிக்குள் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் புனித ரிடீமர் தேவாலயத்தின் பிரதான வாயிலின் வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர். அப்போது தேவாலயத்தில் உள்ள விளக்குகள் மற்றும் அலங்காரத்தைச் சேதப்படுத்தி விட்டு, இயேசு கிறிஸ்துவின் சிலை வைக்கப்பட்டிருந்த தேவாலயத்தின் நுழைவாயிலில் உள்ள கண்ணாடி பெட்டியை செங்கற்களை வீசி உடைத்த பின்னர்தான் இந்த இருவரும் அங்கிருந்து சென்றனர். மேலும் இவையனைத்தும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது” என்று புனித ரிடீமர் தேவாலயத்தின் பாதிரியார் பட்ராஸ் முண்டு, தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட தி இந்துவிடம் கூறியுள்ளார்.

’பிற மதத்தைச் சேர்ந்தவர்களை இந்துவாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும்’ – தேஜஸ்வி சூர்யா

அந்த 2 நபர்களில் ஒருவரின் முகம் சிசிடிவி இல் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே அந்த நபரைக் கண்டுபிடிப்பது காவல்துறைக்குக் கடினமாக இருக்கக்கூடாது என்று பாதிரியார் பட்ராஸ் முண்டு கூறியுள்ளார்.

ஹரியானாவில் பல இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டது. அத்தகைய சம்பவங்களுடன் கிறிஸ்து சிலை உடைக்கப்பட்டதையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் கிறிஸ்தவ சமூகத்தின் அமைதியைக் குலைக்கும் நிகழ்ச்சி நிரலாகவே எனக்குத் தோன்றுகிறது என்று பாதிரியார் பட்ராஸ் முண்டு கூறியுள்ளார்.

Source: the hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்