கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள இந்துக்கள் அனைவரும் தங்களது பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் போது பிற மதத்தினர் நடத்தும் கடைகளில் இருந்து எந்த பொருட்களையும் வாங்க வேண்டாம் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவை சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றன.
மற்ற மத வியாபாரிகளிடம் இருந்து இந்து வியாபாரிகளை வேறுபடுத்திக் காட்ட அவர்கள் தங்களது கடைகளின் முன் காவி பேனர்களை வைக்குமாறு இந்துத்துவா அமைப்புகள் ஒட்டிய அந்த சுவரொட்டியில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பல இந்து வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு முன் காவிக் கொடி வைத்திருக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
Source : the hindustan gazette
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.