Aran Sei

புத்தமத உறுதிமொழி கூறிய ஐ.பி.எஸ் அதிகாரி – இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு

தெலுங்கானாவில் பௌத்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு புத்தமதத்தின் உறுதிமொழியைக் கூறிய அம்மாநில ஐ.பி.எஸ் அதிகாரியை இந்துத்துவ அமைப்பினர் கடுமையாகச் சாடியுள்ளனர்.

கட்டாயமதமாற்றம் எனக்கூறி பஜ்ரங்தளம் போராட்டம் – ரயில்பயணத்தில் பாதிவழியில் இறக்கிவிடப்பட்ட கன்னியாஸ்திரிகள்

கடந்த மார்ச் 15 அன்று தெலுங்கானா மாநிலம் தூலிதத்தா பகுதியில் உள்ள புத்த விகாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு புத்தவந்தனம் என்கிற புத்த மதத்தின் உறுதிமொழியை ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.எஸ்.பிரவீன் குமார் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.பிரவீன் குமார் மீது விஸ்வ ஹிந்து பரிஷத் , பஜ்ரங் தள் போன்ற இந்துத்துவ அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தாஜ்மஹாலில் சிவ வழிபாடு- இந்து மகாசபா உறுப்பினர்கள் கைது

புத்த வந்தனம் என்பது நாக்பூர் தீக்சா பூமியில் அண்ணல் அம்பேத்கர் புத்தமதம் மாறிய போது ஏற்றுக்கொண்ட 22 உறுதிமொழிகள் ஆகும்.

இந்த உறுதி மொழியில் “புத்தர் கூறிய கருத்துக்கு எதிராகச் செயல்படமாட்டேன், இந்து மதத்தின் கடவுளர்களை வணங்கமாட்டேன்” போன்றவை இடம்பெற்றிருக்கும்.

இதுகுறித்து ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி , “நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூற சொல்லியதையே தான் கூறியதாகவும் , அது எந்த மதத்தினரின் மனதை புண்படுத்தி இருந்தாலும் வருந்துகிறேன். இதை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அந்த மேடையிலேயே தெரிவித்தும் உள்ளனர் ” என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கும்பல்நீதி ஆதிக்கம் – கண்ணை மூடிக் கொள்ளும் இந்தியர்கள்

ஐ.பி.எஸ் அதிகாரி பிரவீன் குமார் (TSWREIS) அம்மாநில சமூகநல உண்டுஉறைவிட கல்வித் துறையில் நியமிக்கப்பட்டபோது அந்தத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி விகிதமானது கடந்த 2019 ஆம் ஆண்டு 64.8% லிருந்து 84.31% ஆக உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

source; THE WIRE

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்