Aran Sei

திருப்பூரில் பாலியல் தொல்லையால் பெண் தீக்குளிக்க முயற்சி – பெரியார் சிலையை அவமதிக்க வற்புறுத்திய இந்து மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி

பெரியார் சிலையை அவமதிக்க வற்புறுத்தியும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் இந்து மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்கள் கொடுக்க பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு பெண் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

உடனே அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரும், பொதுமக்களும் இணைந்து அந்த பெண்ணின் உடலில் தண்ணீரை ஊற்றி அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

பிறகு காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணுக்கு அறிவுரை வழங்கி அவரது பிரச்சினையை மனுவாக எழுதிக் கொடுக்கும் படி கூறியுள்ளனர் அதன்படி அவரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு எழுதிக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளது,

எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018-ஆம் ஆண்டில் நான் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறேன். விவாகரத்திற்குப் பிறகு இந்து மக்கள் முன்னேற்றக் கழக மாநில நிர்வாகி பழனிகுமார் எனக்கு அறிமுகமானார். இருவரும் நண்பர்களாகப் பழகினோம். ஆனால் அவர் என்னைத் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலைக்குச் செருப்பு மாலை போடும் படி வற்புறுத்தினார். மேலும் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்தும் வந்துள்ளார்.

இது தொடர்பாகத் திருப்பூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது அவர் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்து முகநூலில் அவதூறு பரப்பி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் நான் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்த மனுவில் அந்த பெண் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்