கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவ மிஷனரிகள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் கிறிஸ்துமஸ் தாத்தாவைக் கொண்டு பரிசுகள் வழங்கி, குழந்தைகள் மற்றும் ஏழைகளை தங்கள் மதத்தின்பால் ஈர்ப்பதாகவும் குற்றஞ்சாட்டி, சில இந்து அமைப்பினர் கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவ பொம்மைகளை எரித்துள்ளனர்.
நேற்று(டிசம்பர் 25), உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரின் எம்.ஜி சாலையில் உள்ள தூயர் ஜான்ஸ் கல்லூரி மற்றும் அந்நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெளியே இந்து அமைப்புகளான அந்தராஷ்டிரிய இந்து பரிஷத் மற்றும் ராஷ்டிரிய பஜ்ரங் தளத்தின் செயற்பாட்டாளர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா அல்லது செயின்ட் நிக்கோலஸ் என்று அழைக்கப்படும் சாண்டா கிளாஸின் உருவ பொம்மைகளை எரித்துள்ளனர்.
கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மீது இந்துத்துவாவினர் தொடர் தாக்குதல் – நடவடிக்கை எடுக்குமா பாஜக அரசு?
“டிசம்பர் மாதம் வரும்போதெல்லாம், கிறிஸ்துமஸ், கிறிஸ்துமஸ் தாத்தா, புத்தாண்டு என்ற பெயரில் கிறிஸ்த்தவ மிஷனரிகள் சுறுசுறுப்பாக செயல்படுகின்றனர். கிறிஸ்துமஸ் தாத்தாவை பரிசுகளை வழங்க வைத்து, குழந்தைகளை கவர்ந்து, அவர்களை கிறிஸ்துவ மதத்தின் பக்கம் ஈர்க்கிறார்கள்” என்று ராஷ்டிரிய பஜ்ரங் தளத்தின் பிராந்திய பொதுச் செயலாளர் அஜ்ஜு சவுகான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்த அமைப்பின் மற்றொரு உறுப்பினரான அவ்தார் சிங் கில், “சேரிகளுக்குச் சென்று இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் கிறிஸ்துவ மிஷனரிகளை நாங்கள் கண்காணிப்போம். அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக ராஷ்டிரிய பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள் கடுமையாகச் செயல்படுவார்கள்” என்று எச்சரித்துள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.