ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப், ரெடிட், கிட்ஹப் போன்ற சமூக ஊடகங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் அதிகமாகியுள்ளன. இதன் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்துத்துவாவினரின் குற்ற செயல்கள் அதிகரித்துள்ளன என்று கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மதிப்பீடு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் வெறுப்புகளைப் பற்றி இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் அனுபவங்கள் என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற 60% பேர் சமூக ஊடகங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் பதிவுகளைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர். 2021 நவம்பர் மற்றும் டிசம்பருக்கு இடையில் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?
இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 40% பேர், இஸ்லாமியர் என்ற காரணத்தால் அவமதிக்கப்பட்டதாகவும், 60% பேர் இங்குக் குடியேறிய இஸ்லாமியர்கள் இந்தியாவைக் கைப்பற்றி விடுவார்கள் என்ற உள்ளடக்கத்துடன் பதிவுகளைக் கண்டதாகவும் கூறியுள்ளனர்.
64% பேர் கொரோனா தொற்றுநோய்க்கு இஸ்லாமியர்களே காரணம் என்று கூறிய சமூக ஊடக பதிவுகளைக் கண்டதாகவும், 55% பேர் இஸ்லாமியர்களைப் பன்றிகள் மற்றும் நாய்களுடன் ஒப்பிடும் பதிவுகளைப் பார்த்ததாகவும் கூறியுள்ளனர்.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.