Aran Sei

கர்நாடகா அரசுப் பள்ளியில் இஸ்லாமிய மாணவர்களின் தொழுகை – இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு

ர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வகுப்பறையிலேயே தொழுகை நடத்துவதற்கு சுமார் 20 இஸ்லாமிய மாணவர்களுக்கு அப்பள்ளியின் தலைமையாசிரியர் அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து இந்துத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆகவே இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) பிற்பகல் ஒரு காலியான வகுப்பறையில் தொழுகை நடத்த 20 இஸ்லாமிய மாணவர்களுக்கு அனுமதித்ததாகக் கூறி முல்பாகல் சோமேஸ்வரா பாலய பலே சங்கப்பா அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியரை கண்டித்து இந்துத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

“மாணவர்கள் தாங்களாகவே தொழுகை நடத்தினார்கள், அப்போது நான் இங்கு இல்லை, கல்வி அதிகாரி கிரிஜேஸ்வரி தேவி இதனைப் பற்றித் தெரிவித்த பின்பு தான் எனக்கு இது தெரிந்தது” என்று அப்பள்ளியின் தலைமையாசிரியர் உமா தேவி தெரிவித்துள்ளார்.

“இப்பள்ளியில் சுமார் 165 இஸ்லாமிய மாணவர்கள் படிக்கிறார்கள், மொத்தமாகப் பள்ளியில் 375 மாணவர்கள் கல்வி கற்கின்றனர், மேலும் பள்ளிக்கு அருகிலேயே ஒரு மசூதி உள்ளது, இஸ்லாமிய மாணவர்கள் அங்குத் தொழுகைக்குச் செல்வதில் எந்த பிரச்சனையும் இதுவரை இல்லை. இதுவரையிலும் பள்ளியில் இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நடத்துவது குறித்து மற்ற மாணவர்கள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை” கல்வி அதிகாரி கிரிஜேஸ்வரி தேவி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு அரசு மகளிர் கல்லூரியில், ஏபிவிபியின் எதிர்ப்பைத் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குச் சென்ற 8 இஸ்லாமிய மாணவிகளுக்கு வகுப்புகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்