Aran Sei

இறப்பிலும் இணை பிரியாத நண்பர்கள் – அரியலூரில் இஸ்லாமிய-இந்து குடும்பங்களின் நல்லிணக்கம்

றப்பிலும் இணைபிரியாத இஸ்லாமிய-இந்து நண்பர்களின் இழப்பு, இரு குடும்பத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் காளியம்மன் கோவிலில் பூசாரியான மகாலிங்கம், சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது எதிர்வீட்டில் வசித்து வரும் ரைஸ்மில் உரிமையாளர் ஜெய்லாபுதினும், இவரும் 40 ஆண்டுகளுக்கு மேலாக உற்ற நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இருவரும் தங்கள் சுகதுக்க நிகழ்ச்சிகளில் முதல் ஆளாக பங்குகொண்டு நட்பு பாராட்டி வந்துள்ளனர்.

‘இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாக துர்கா பூஜை கொண்டாடும் வங்க பண்பாட்டை அழிக்கும் பாஜக’ – மம்தா குற்றச்சாட்டு

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 6), ஜெய்லாபுதினும் மகாலிங்கமும்  உடல்நலக்குறைவின் காரணமாக ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ‌அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அருகருகே உள்ள படுக்கையில் இருவரும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

கெடுவாய்ப்பாக, சிகிச்சை பயன் தராது போகவே, ஒருவர் பின் ஒருவராக அரை மணி நேரத்திற்குள்ளாக உயிர்தோழர்கள் இருவரும் தங்கள் உயிரை நீர்த்துள்ளனர்.

கோயிலில் தண்ணீர் குடித்ததற்காக தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவர் – #sorryAsif ஹேஷ்டாக் மூலம் சிறுவனுக்கு துணைநிற்கும் மக்கள்

இப்பெரும் இழப்புகளைச் சுமந்து கொண்டு பேசிய இருவரின் குடும்பத்தாரும், “எங்கள் தாத்தா முதல் தலைமுறையாகவும், எங்கள் தந்தை இரண்டாம் தலை முறையாகவும் நண்பர்களாக இருந்தனர். இதைத் தொடர்ந்து நாங்களும் மூன்றாவது தலைமுறையாக இதேபோல் ஒற்றுமைமிக்க நண்பர்களாக இருப்போம். மதங்களை கடந்து உற்றார் உறவினர்களாக சுகதுக்க நிகழ்வுகளில் பங்கெடுத்து, நட்பை இனி வரும் தலைமுறைகளிலும் நாங்கள் தொடர்வோம். எங்களின் தாத்தா தந்தை ஆகியோரின் ஆசையும் அதுதான்.” என்று கூறியுள்ளனர்.

Source : News18 Tamilnadu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்