Aran Sei

அயோத்தி உள்ளாட்சி தேர்தல் – இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் இஸ்லாமியர் வெற்றி

”என்னுடைய கிராமத்தில் மட்டுமின்றி அயோத்தி முழுமைக்கும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் எவ்வளவு ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எனது வெற்றி விளங்குகிறது” என்று, இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமியர் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி, மதுரா, வாரணாசி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு நடந்த பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இந்தத் தேர்தலில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, வாரணாசி மற்றும் அயோத்தியில் அதிக இடங்களை கைப்பற்றியது. மாயவாதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அஜித் சிங் தலைமையிலான் ராஷ்ட்ரிய லோக் தளம் மதுராவில் அதிக இடங்களைப் பிடித்தது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது.

அயோத்தியில் உள்ள 40 இடங்களில், சமாஜ்வாதி கட்சி 24 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் மீதமுள்ள இடங்களிலும் (10) வெற்றிப்பெற்றனர்.

பிணங்கள் ஆற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன; பிரதமர் அவர்களே, கண்ணாடியை கழற்றி விட்டு பாருங்கள் – ராகுல் காந்தி

இந்நிலையில், இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியான ராஜன்பூரில், ஹஃபிஸ் அசிமுதின் கான் எனும் நபர், கிராம பஞ்சாயத்து தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தேஜஸ்வி சூர்யாவை கேள்விகளால் திணறடித்த பத்திரிகையாளர்கள் – பாதியில் நிறுத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு

ஹஃபிஸ் அசிமுதின் குடும்பம்தான் அந்த கிராமத்தில் வசிக்கும் ஒரே இஸ்லாமிய குடும்பம் என்ற நிலையில், பஞ்சாயத்து தேர்தலில் எட்டு வேட்பாளர்கள் போட்டியிட்டதாகவும், அதில் ஹஃபிஸ் அசிமுதின் தான் ஒரே இஸ்லாமியர் வேட்பாளர் எனவும் இந்துஸ்தான் டைம்ஸ் கூறியுள்ளது. இந்நிலையில், ராஜன்பூர் கிராம மக்கள் மற்ற வேட்பாளர்கள் அனைவரையும் நிராகரித்து ஹஃபிசை தேர்ந்தெடுத்துள்ளனர்.

மோசமான தடுப்பு மருந்து கொள்கைக்கான விருது, மோடிக்கு வழங்கப்பட வேண்டும் – அசாதுதீன் ஒவைசி

இந்த வெற்றி தொடர்பாக பேசிய ஹஃபிஸ், ”என்னுடைய கிராமத்தில் மட்டுமின்றி அயோத்தி முழுமைக்கும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் எவ்வளவு ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எனது வெற்றி விளங்குகிறது” என்று தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் கூறியுள்ளது.

மாட்டுச் சாணம் கொரோனாவை குணப்படுத்தாது; வேறு நோயைத்தான் உண்டாக்கும் – மருத்துவர்கள் தகவல்

”நாங்கள் மதத்தை அடிப்படையாக வைத்து வாக்குச் செலுத்தவில்லை. யார் வெற்றிப் பெற்றால் நன்மை நடக்குமோ அதை மனதில் வைத்தே வாக்களித்தோம். நாங்கள் உணவுப்பூர்வமான இந்துக்கள், ஆனால் ஒரு இஸ்லாமியரை தலைவராக தேர்ந்தெடுப்பதின் மூலம், மதச்சார்பின்மைக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்” என்று அக்கிராமத்தைச் சேர்ந்த சேகர் சாகு எனும் நபர் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான செய்தியை தன் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், “புதிய இந்தியாவையும் மீறி, உண்மையான இந்தியா தன்னை தக்கவைத்து கொண்டிருப்பதால் இறைவனுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்