Aran Sei

’நாங்கள் காந்தியையே விட்டுவைக்கவில்லை’ – கர்நாடக முதலமைச்சரை மிரட்டிய இந்து மகாசபை தலைவர் கைது

ட்டவிரோதமாக கட்டப்பட்ட இந்து கோவில் இடிக்கப்பட்டது தொடர்பாக, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை, ‘காந்திஜியையே நாங்கள் விடவில்லை, நீங்கள் யார்?’ என்று மிரட்டிய இந்து மகாசபையின் மாநில பொதுச்செயலாளர் தர்மேந்திரா கைது செய்யப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, மைசூர் அருகில் உள்ள நஞ்சன்கூட்டில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இந்துக் கோவிலை இடித்தது குறித்து மாநில அரசுமீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இதுகுறித்து, நேற்று (செப்டம்பர் 19), செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திரா, “நாங்கள் கோவில் இடிப்பை அனுமதிக்க மாட்டோம். நாங்கள் காந்திஜியையே விட்டுவைக்கவில்லை. நீங்கள் யார்?” என்று கர்நாடக முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

‘கோட்சே’ பெயரில் கல்வி நிலையம்: எதிர்ப்பு வலுத்ததால் மூடிய இந்து மகாசபை

“சாலை விரிவாக்கம் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. ஆனால் சில இடங்களில் பிரார்த்தனை கூடங்கள் சாலைகளின் நடுவில் உள்ளன. அவற்றுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடாதா? நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால் நீங்கள் அதைச் செய்யமாட்டீர்கள். காரணம், அதிலிருந்து நீங்கள் வருவாய் பெறுகிறீர்கள். இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அல்ல, இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் திருப்திப்படுத்தும் முயற்சி. இந்துக்கள் மீதான தாக்குதல. இதை இந்து மகாசபை கண்டிக்கிறது.” என்று அவர் பேசியுள்ளார்.

பின்னர், என்டிடிவி -யிடம் பேசுகையில், மகாத்மா காந்தியின் படுகொலை குறித்து குறிப்பிட்டது, முதலமைச்சரையோ அல்லது வேறு யாரையோ அச்சுறுத்துவதற்காக இல்லை என்றும் இது கோபத்தின் வெளிப்பாடு மட்டும்தான் என்றும் கூறியுள்ளார்.

தாஜ்மஹாலில் சிவ வழிபாடு- இந்து மகாசபா உறுப்பினர்கள் கைது

தர்மேந்திரா தவிர, அவருடன் கூட்டத்தில் பங்கேற்ற ராஜேஷ் பவித்ரன் மற்றும் பிரேம் பூலாலி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மங்களூர் காவல்துறையால் இந்திய தண்டனைச் சட்டம்  பிரிவுகள் 120 (ஆ) (கிரிமினல் சதி), 153 (அ) (மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகையை ஊக்குவிப்பது), 505 (2) (பொது அமைதியை குலைக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடுவது), 506 (குற்றவியல் மிரட்டல்) போன்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

Source: NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்