Aran Sei

மசூதிக்குள் கிருஷ்ணர் சிலை வைக்கப்படும் என்று இந்து மகாசபை அறிவிப்பு – மதுராவில் ஊரடங்கு அமல்

துராவில் உள்ள மசூதியில், கிருஷ்ணர் சிலை வைக்கப்படும் என்று அகில பாரத இந்து மகாசபை அறிவித்ததை தொடர்ந்து, மதுரா மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கிருஷ்ணர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள ஷாஹீ ஈத்கா மசூதிதான் கிருஷ்ணரின் உண்மையான பிறப்பிடம் என்று அகில பாரத இந்து மகாசபை உட்பட பல்வேறு இந்துத்துவ அமைப்புகள் கூறிவருகின்றன.

‘கிருஷ்ணஜென்ம பூமி’ : மற்றுமொரு இருண்ட காலம் நோக்கி இந்தியா

இந்நிலையில், நாராயணி சேனா என்ற வலதுசாரி அமைப்பு, மசூதியை அகற்றக்கோரி, விஷ்ராம் கேட் என்ற இடத்திலிருந்து “ஸ்ரீகிருஷ்ணா ஜென்மஸ்தான்” (ஷாஹீ ஈத்கா மசூதி) நோக்கி பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தி இந்து கூறுகிறது.

இதைத்தொடர்ந்து, நாராயணி சேனா அமைப்பின் செயலாளர் அமித் மிஷ்ரா கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் தேசிய தலைவர் மணிஷ் யாதவ் லக்னோவில் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆக்ரா கோட்டையின் கீழ் கிருஷ்ணர் சிலை புதைக்கப்பட்டுள்ளது – கிருஷ்ணஜென்மபூமி நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் புதிய மனு

“மதுராவின் அமைதிக்கு யாராலும் குந்தகம் ஏற்பட அனுமதிக்க மட்டோம்” என்று கூறியுள்ள மாவட்ட மாஜிஸ்ட்ரேட் நவ்நீத் சிங் சாஹல், காவல்துறையினருடன் இணைந்து கட்ரா கேஷவ் தேவ் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள ஷாஹீ ஈத்கா பள்ளிவாசலின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டதாகவும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, டிசம்பர் 6 ஆம் தேதி (பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்) அன்று, ஷாஹீ ஈத்கா பள்ளிவாசல் “ஜலாபிஷேகம்” செய்யப்பட்டு “சுத்தப்படுத்தப்பட்ட” பிறகு, கிருஷ்ணர் சிலை அங்கு வைக்கப்படும் என்று இந்து மகாசபை தலைவர் ராஜ்யஸ்ரீ சௌத்ரி அறிவித்திருந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கிருஷ்ணரின் பிறப்பிடமாக கருதப்படும் மதுராவில் இறைச்சிக்கு தடை’ – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

ஷாஹீ ஈத்கா பள்ளிவாசல்தான் கிருஷ்ணர் பிறந்த இடம் என்றும் ஆகவே, அந்த பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டும் என்று கோரியுள்ள பல்வேறு வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரித்து வரும் சூழலில், இந்து மகாசபை இந்த  அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்