Aran Sei

டெல்லியில் நடைபெற்ற இந்து மகாபஞ்சாயத்து: இஸ்லாமிய பத்திரிக்கையாளர்களை ஜிகாதி என கூறியதோடு, 7 பத்திரிக்கையாளர்களை தாக்கிய வலதுசாரியினர்

ன்று (ஏப்ரல் 3) டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்து மகாபஞ்சயத் நிகழ்வில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களின் ஊடாக ​​ஐந்து பத்திரிகையாளர்களை வலதுசாரியினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதில் 4 பத்திரிக்கையாளர்கள் இஸ்லாமியர்கள் ஆவர்.

ராஜஸ்தான்: இந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வகுப்புவாத மோதலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு

சர்ச்சைக்குரிய சாமியார் யதி நரசிங்கானந்தின் சீடரான ப்ரீத் சிங் நடத்தும் சேவ் இந்தியா அறக்கட்டளையின் பதாகையின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட ஒரு காணொளியை ஏஏ நியூஸ் பகிர்ந்துள்ளது. இன்னும் 20 ஆண்டுகளில் 40 விழுக்காடு இந்துக்கள் கொல்லப்படுவார்கள். இதை மாற்ற வேண்டுமானால் நாம் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று இஸ்லாமியர்களைக் குறிவைத்து யதி நரசிங்கானந்த் பேசியுள்ளார். அந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றதாகச் சொல்லப்படுகிறது.

இஸ்லாமியர் மீதான வெறுப்புப் பேச்சுக்கும் கைது செய்யப்படுவார் யதி நரசிங்கானந்த் – காவல்துறை உறுதி

தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களில் அர்பாப் அலி, மீர் பைசல், முகமது மெஹர்பான் மற்றும் தி க்விண்டின் முதன்மை நிருபர் மேகநாத் போஸ் ஆகியோர் அடங்குவர். ஐந்தாவது பத்திரிக்கையாளர் மிரட்டலுக்கு பயந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.

“நாங்கள் வலதுசாரி கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டோம். எங்களின் கேமராவில் இருந்த காணொளிகள் அழிக்கப்பட்டன.. நாங்கள் கொல்லப்படுவோம் என்று பயந்தோம். எங்களை அடிக்கும் போது ஜிஹாதிகள் என்று அவர்கள் கூறினார்கள். காவல்துறையினர் தான் எங்களைக் காப்பாற்றினார்கள்” என்று பத்திரிக்கையாளர் அர்பாப் அலி தி வயர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் வலதுசாரி கும்பலால் தாக்கப்பட்ட ​​நிகழ்வைச் செய்தி சேகரிக்க சென்ற நியூஸ்லாண்ட்ரி செய்தியாளர்கள் ஷிவாங்கி மற்றும் ரோனக் பட் ஆகியோரை வலதுசாரியினர் தாக்கியதாகவும், அவர்களது உபகரணங்கள் கைப்பற்றப்பட்டு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் நீக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஹரித்வாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – யதி நரசிங்கானந்த் சரஸ்வதி மீது வழக்குப் பதிவு

சேவ் இந்தியா அறக்கட்டளை கடந்தாண்டு ஜந்தர் மந்தரில் இதேபோன்ற ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு பேசப்பட்டது என்று 2021 நவம்பரில் டெல்லி காவல்துறையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்