Aran Sei

சிறுபான்மையினரையும் காந்தியையும் இழிவு படுத்திய இந்துத்துவ தலைவர் – காவல்துறை வழக்குப் பதிவு

காத்மா காந்தியை இழிவுபடுத்தியதற்காகவும், தேசத் தந்தையைக் கொன்ற நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காகவும் காளிசரண் மகாராஜ் மீது ராய்ப்பூரில் உள்ள காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளனர்.

ராய்ப்பூரின் முன்னாள் மேயர் பிரமோத் துபே அளித்த புகாரின் பேரில் திக்ரபாரா காவல் நிலையத்தில் காளிசரண் மகாராஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

காளிசரண் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505(2) (இரு வகுப்புகளுக்கு இடையே பகை, வெறுப்பு அல்லது தீய எண்ணத்தை உருவாக்கும் அல்லது ஊக்குவித்தல் அறிக்கைகள்) மற்றும் பிரிவு 294 [எந்தவொரு பொது இடத்திலும் ஆபாசமான செயல்] கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

’பிற மதத்தைச் சேர்ந்தவர்களை இந்துவாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும்’ – தேஜஸ்வி சூர்யா

ராய்பூரில் உள்ள ராவன் பட்டா மைதானத்தில் நடைபெற்ற தரம் சன்சாத் நிகழ்ச்சியில் பேசிய காளிசரண் மகாராஜ், “அரசியல் மூலம் தேசத்தைக் கைப்பற்றுவதே இஸ்லாத்தின் இலக்கு” ​​என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், “காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை நான் வணங்குகிறேன்” என்றும் அவர் கூறினார்.

ஹரித்வாரில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இந்து மதத் தலைவர்கள் பிரிவினைவாதத்தைத் தூண்டும் பேச்சுக்கள் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் காளிசரண் மகாராஜ் பேசியுள்ளார்.

பொதுமக்களை சுட்டுக் கொன்று எரித்த மியான்மர் ராணுவம் – 38 பேர் பலியானதாக தகவல்

இதற்கிடையில், காளிசரண் மகாராஜின் கருத்து குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் மகாத்மா காந்தியின் மேற்கோளைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “நீங்கள் என்னை சங்கிலியால் பிணைக்கலாம், என்னை சித்திரவதை செய்யலாம், இந்த உடலை அழிக்கலாம், ஆனால் என் எண்ணங்களை உங்களால் சிறையில் அடைக்க முடியாது – மகாத்மா காந்தி” என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

source: India today

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்