Aran Sei

கர்நாடகவில் இடிக்கப்பட்ட கோயில் – பாஜகவுக்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் போராட்டம்

ர்நாடக மாநிலம் நஞ்சன்கவுட் பகுதியில் கோவில் இடிக்கப்பட்டதற்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோடே பகுதியில் உள்ள  ஆஞ்சநேயர் சுவாமி கோவில் முன்கூடிய வி.எச்.பி, இந்து ஜாகரண வேதிகே மற்றும் இதர இந்துத்துவ அமைப்பினர் மகாதேவம்மா  கோவில் இடிக்கப்பட்டதற்கு எதிராகவும் கர்நாடக பாஜக அரசுக்கு எதிராகவும்  முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், நஞ்சன்கவுட் அருகே உள்ள ஹுச்சகனியில் உள்ள மகாதேவம்மா கோவில் இடிக்கப்பட்டதன் காரணமாகப் பாஜக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள பாஜகவைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர், கோவில் இடிக்கப்பட்டதற்காக  மாவட்டம் நிர்வாகத்திற்கு  தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள மைசூரு மாவட்டப் பொறுப்பாளரும் அமைச்சருமான எஸ்.டி.சோமசேகர், மைசூரின் பொதுவிடங்களில்  உள்ள 100 கோயில்கள் அங்கீகரிக்கப்படாதவையென அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் அவை இடிக்கப்படுவதற்கான பணி நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, பொதுவிடங்களில் உள்ள  கோவில்களை அகற்றுவது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டு,கோவிலை அகற்றும் முடிவு எடுக்கப்பட்டது என்றும்    எஸ்.டி.சோமசேகர் குறிப்பிட்டுள்ளார்.

Source: THE HINDU 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்