Aran Sei

டெல்லியில் இறந்து கிடந்த ஹிமாச்சல பிரதேச பாஜக எம்.பி – விசாரணை செய்யும் டெல்லி காவல்துறை

ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வரூப் சர்மா டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் கோம்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த ஸ்வரூப் சர்மா, இன்று (மார்ச் 17)  காலை அவரது அறையை விட்டு வெளியே வராததை அடுத்து அவரது உதவியாளர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து காலை 6.30 மணிக்கு அங்கு வந்த டெல்லி வடக்கு அவன்யூ காவல் நிலைய காவல்துறையினர் பார்த்தபோது இறந்து கிடந்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

“பாஜக என்னை கொல்ல சதி திட்டம் தீட்டுகிறது” – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த ஸ்வரூப் சர்மா, அந்த இல்லத்தில் தனது உதவியாளர் மற்றும் சமயல்காரருடன் வசித்து வந்தார்.

முதல் கட்ட விசாரணையில் அவரது அறையில் இருந்து மருத்துகள் மட்டுமே கிடைத்ததாகவும் குறிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை எனவும் டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டி மாவட்டம் ஜல்பேஹர் கிராமத்தில் ஜூன் 10, 1958 ஆம் ஆண்டு பிறந்த ஸ்வரூப் சர்மா, 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மண்டி தொகுதியில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்