Aran Sei

கர்நாடகா: ஹிஜாப் தடையை எதிர்த்து முழு அடைப்பு

ஹிஜாப் அணிய தடை விதித்த உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமிய அமைப்புகள் முழு  அடைப்பிற்கு அழைப்பு விடுத்ததால், உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பட்கல் நகரின் பல பகுதிகளில் கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

பட்கல் நகரில் உள்ள கடைகள், உணவகங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. முக்கிய வீதிகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

“பட்கல் நகரத்தில் நேற்று (மார்ச் 16) காலை முதல் முழு அடைப்பு தொடங்கியது. பட்கல் தஞ்சிம் என்ற அமைப்பு முழு  அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, இஸ்லாமியர்கள் அல்லாத பிரிவினரும் ஆதரவு அளித்துள்ளனர்” என்று மூத்த பத்திரிகையாளர் இனாயத்துல்லா கவாய் கூறியுள்ளார்.

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த நீதிமன்றத்தின் செயல் இஸ்லாமியர்களுக்கு செய்யும் அநீதி – சீமான்

வணிக மையங்களான மரிகட்டா பிரதான சாலை, முகமது அலி சாலை, நவயத் காலனி, மதீனா காலனி, ஆசாத் நகர், துறைமுக சாலை மற்றும் பிற இடங்களில் மூடப்பட்ட கடைகளே மக்களை வரவேற்றன.

பட்கல் தன்சிம் பொதுச்செயலாளர் அப்துல் ரபீக் கூறுகையில், “நீதிமன்ற உத்தரவால் இஸ்லாமிய சமூகம் மகிழ்ச்சியடையவில்லை. இது தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்பவர்களுக்கு எல்லா வகையான ஆதரவையும் அளிக்க தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்