கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக் கல்லூரிக்குள் வரக்கூடாது என்ற உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
பிகினி, ஜீன்ஸ், ஹிஜாப் என எதுவாக இருந்தாலும் என்ன அணிய வேண்டும் என்பதை முடிவு செய்வது பெண்ணின் உரிமை. இது இந்திய அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என்று பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார்.
‘பள்ளிகளில் ஹிஜாப்புக்கு தடை விதிக்க பரிசீலிக்கும் ம.பி., அரசு’ – கல்வித்துறை அமைச்சர் தகவல்
பெண்களுக்கான உரிமைகள் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் பாஜக பூஜ்ஜியமாகத்தான் உள்ளது என்று பிரியங்கா காந்தி தெரிவித்த்துள்ளார்.
கர்நாடகாவின் உடுப்பி, சிக்கமகளூரு, மாண்டியா மாவட்டங்களில் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது எனக் காவி துண்டு அணிந்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாண்டியாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்கான் என்ற மாணவியைக் காவி துண்டு அணிந்த கூட்டம் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட, அதற்குப் பதிலாக அல்லாஹு அக்பர் என அந்த பெண் முழக்கமிட்டார்.
ஷிமோகா நகரில் கல்லூரி ஒன்றில் தேசியக் கொடி இருக்கும் இடத்தில் காவிக் கொடியை சில மாணவர்கள் ஏற்றினர். இதனால், சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில்தான், கர்நாடகாவில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.