கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவி பீபி முஸ்கான் கானை நோக்கிக் காவி துண்டு அணிந்த மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட அதற்கு எதிர்வினையாக அவர் அல்லாஹு அக்பர் என முழக்கமிட்டார். அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. இந்நிலையில் அந்த மாணவியின் துணிச்சலை ஆர்எஸ்எஸ் இன் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் பாராட்டியுள்ளது
‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிடும் மாணவர்களின் நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் முஸ்கான் இந்தியாவின் மகள் மற்றும் நமது சகோதரி ஆவார். இந்த நெருக்கடியான நேரத்தில் நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்கிறோம் என்று முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் தெரிவித்துள்ளது.
“இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு இந்திய அரசியலமைப்புச் சுதந்திரம் வழங்கியுள்ளது. மாணவர்கள் காவி துண்டினை அணிந்துகொண்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் இந்து கலாச்சாரத்தை இழிவுபடுத்தியுள்ளனர்” என்று முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்சை சேர்ந்த அனில் சிங் தெரிவித்துள்ளார்.
தொப்பி அணிந்து பாராளுமன்றம் செல்ல முடியும்போது ஹிஜாப் அணிந்து கல்லூரி செல்ல முடியாதா? – ஓவைசி கேள்வி
“ஹிஜாப் அல்லது பர்தா என்பது இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்து பெண்கள் கூட விருப்பப்பட்டால் பர்தாவை அணியலாம். இஸ்லாமியர்கள் எங்கள் சகோதரர்கள், இரு சமூகத்தினரின் டிஎன்ஏவும் ஒன்றுதான். இஸ்லாமியர்களை தங்கள் சகோதரர்களாக இந்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அனில் சிங் தெரிவித்துள்ளார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.