Aran Sei

ஹிஜாப் விவகாரம்: அனைத்து மத தலைவர்களின் கூட்டத்தை கர்நாடக அரசு கூட்ட வேண்டும் – கர்நாடக முன்னாள் முதல்வர் வேண்டுகோள்

ர்நாடகாவில் உள்ள கல்வி வளாகங்களில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற அரசின் அறிவிப்பை நீக்குவதற்கு அனைத்து மத தலைவர்களின் கூட்டத்தை மாநில அரசு கூட்ட வேண்டும் என்று கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி பரிந்துரைத்துள்ளார்.

ஹிஜாப் தடையால் தேர்வு எழுதாத மாணவர்கள் – மறுதேர்வு நடத்த முடியாது என்று கர்நாடக அரசு அறிவிப்பு

“கர்நாடக அரசு ஒரு தாய் உள்ளத்துடன் செயல்பட வேண்டும். ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சீருடையுடன் பொருந்தக் கூடிய வண்ணத்தில், ஹிஜாப் அணிந்து வருவதைக் கர்நாடக அரசும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று குமாரசாமி கூறியுள்ளார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் அனைவரும் மதிக்கும் போதும், பல இஸ்லாமிய மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்துள்ளனர். ஹிஜாப் அணியாமல் வகுப்புகளில் கலந்து கொள்ள அவர்கள் தயாராக இல்லை என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

வட இந்தியாவின் பல இடங்களில் கடுமையான வகுப்புவாத பிளவுகள் உள்ளது என்று கவலை தெரிவித்துள்ள குமாரசாமி, தென் இந்தியா அதிலும் குறிப்பாகக் கர்நாடகா சமாதான சுகவாழ்வுக்குப் பெயர்பெற்றது என்று குமாரசாமி கூறியுள்ளார்.

மதவெறியை தூண்டும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை அரசியல் லாபத்திற்காக விளம்பரப்படுத்தும் பாஜக – சந்திரசேகர் ராவ் விமர்சனம்

பாஜகவினர் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தின் மீது கவனம் ஈர்க்கும் நிகழ்வானது நமது சமூகத்தில் உள்ள வகுப்புவாத வெறுப்புக்கு ஒரு உதாரணமாகும். மேலும் இப்படம் ஒரு கற்பனையான படைப்பு என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்