Aran Sei

ஹிஜாப் தடை தொடர்கிறது – வழக்கை பெரிய அமர்விற்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை வகுப்பறைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவிகள் தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் பெரிய அமர்விற்கு மாற்றியுள்ளது. இடைக்கால நிவாரணங்கள் கூட பெரிய அமர்வுதான் பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாததை எதிர்த்தது தாக்கல் செய்த மனுக்கள் மீதான 2 நாள் விசாரணையின் முடிவில் கர்நாடக உயர் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

ஹிஜாப் விவகாரம்: கல்லூரிகளுக்கு மூன்று நாள் விடுமுறையளித்து கர்நாடக அரசு உத்தரவு

“மாணவர்களின் இந்தாண்டு பள்ளி, கல்லூரி வகுப்புகள் முடிவடைய இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால், அவர்களை ஒதுக்கிவிடாதீர்கள். இந்த தடையால் மாணவிகளின் கல்வி பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கல்லூரிக்குள் மிக முக்கியமான அமைதியும், சகோதரத்துவமும் கொண்டு வரப்பட வேண்டும்” என்று மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

ஹிஜாப் விவகாரத்தை ஒட்டி நடந்து வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் அணிய அனுமதி மறுத்த கல்லூரி நிர்வாகம் – மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு பசவராஜ் பொம்மை அரசு மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

இத்தகைய போராட்டங்களைச் சமாளிக்கப் பள்ளி மற்றும் கல்லூரி வாசல்களில் இருந்து 200 மீட்டர் சுற்றளவில் போராட்டம், ஆர்ப்பாட்டம் அல்லது கூட்டங்களுக்குத் தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்