Aran Sei

ஹிஜாப் விவகாரம்: பல்கலைக்கழக கொடிக்கம்பத்தில் காவிக்கொடி ஏற்றிய வலதுசாரிகள் – வன்முறை; ஊரடங்கு

ர்நாடகாவின் ஷிவமொக்காவில் உள்ள அரசுப் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதை எதிர்த்துக் ​​காவி துண்டு அணிந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் கொடிக் கம்பத்தில் ஏறிக் காவிக் கொடியை ஏற்றினர். அதன் பிறகு அங்குள்ள மாணவர்களின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள மாணவர்களை காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்துள்ளனர்.

கல்வீச்சு சம்பவங்களைத் தொடர்ந்து ஷிவமொக்கா மாவட்ட நிர்வாகம் இன்றும் நாளையும் (பிப்பிரவரி 8, 9) 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்