Aran Sei

ஹிஜாப் விவகாரம்: எங்கள் நாட்டின் பிரச்சினை பற்றி அல்கொய்தா பேச தேவையில்லை – முஸ்கான் கான் தந்தை கருத்து

ங்கள் நாட்டின் பிரச்சனைகளைப் பற்றி அல்கொய்தா பேச வேண்டிய தேவை இல்லை. இதுபோன்றவர்கள் தான் நமது அமைதியை கெடுக்கிறார்கள்” என கர்நாடகாவில் நடைபெற்ற ஹிஜாப் போராட்டத்தில் வலதுசாரி இந்துத்துவாவினருக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி முஸ்கான் கானை அல்கொய்தா பாராட்டிய விவகாரத்தில், அவரின் தந்தை பதில் கொடுத்துள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் உச்சத்தில் இருந்தபோது மாண்டியாவில் பிஇஎஸ் கல்லூரிக்கு புர்கா அணிந்து வந்த மாணவி முஸ்கான் கானை கண்டதும் காவித் துண்டு அணிந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள், அவர் முன் நின்று ”ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கம் எழுப்பினர். மாணவி முஸ்கான் எந்தவித அச்சமும் கொள்ளாமல் அம்மாணவர்களுக்கு எதிராக ”அல்லாஹு அக்பர்” என்று குரல் எழுப்பியபடி தன் பாதையில் நடந்தார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியது.

பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் ஹிஜாப் அணியக் கூடாது – கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ்

மாணவி முஸ்கான் கானின் தைரியத்தை பலரும் பாராட்டினர். இந்தச் சம்பவம் நடந்து பல நாட்களுக்குப் பிறகு அல் கொய்தாவின் தலைவரான அய்மன் அல்-ஜவாஹிரி மாணவி முஸ்கானைப் பாராட்டி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்துத்துவா கும்பலை முஸ்கான் தைரியமாக எதிர்கொண்டு இருக்கிறார். ஜிஹாத்தின் ஆற்றல் அவரிடம் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தக் காணொளியில், ”அவர் எங்கள் மதத்திற்கான, விடுதலைக்கான கோஷத்தை எழுப்பி உள்ளார். இஸ்லாமிய மக்களை முஸ்கான் தட்டி எழுப்பி இருக்கிறார். முஸ்கான் ஒரு புனிதமான பெண். எங்கள் சகோதர மிக முக்கியமான உயரத்தை அடைந்துவிட்டார். அல்லா அவருக்கான பரிசை வழங்குவார். இந்து இந்தியாவின் நிலையை அவர் வெளிப்படுத்தி உள்ளார். அந்த நாட்டின் மோசமான நிலையை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

கர்நாடகா 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதித்த 7 ஆசிரியர்கள் இடைநீக்கம்

இந்திய இஸ்லாமியர்கள் அங்கு தொடர்ந்து பதிலடி கொடுக்க வேண்டும். மீடியா மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் அரசுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அவர் எங்களை கவர்ந்துவிட்டார். அவரை பாராட்டி நான் கவிதை கூட எழுதி இருக்கிறேன். நான் கொடுக்கும் இந்த கவிதையை பரிசாக நினைத்து முஸ்கான் சகோதரி அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி அல் கொய்தாவின் தலைவரான அய்மன் அல் சவாஹிரி அக்காணொளியில் பேசி இருந்தார்.

அவரின் பாராட்டுக்கு மாணவியின் தந்தை எதிர்வினை ஆற்றியிருக்கிறார். இதுதொடர்பாக மாணவி முஸ்கான் கானின் தந்தை முகமது ஹுசைன் அளித்த பேட்டியில், “நேற்று பிற்பகலில் தான் இந்த விவகாரம் எனக்கு தெரிந்தது. ஜவாஹிரி யார் என்றுக் கூட எனக்குத் தெரியாது. அவர் என் மகள் பெயரை பயன்படுத்து மிகத் தவறு. எனது தாய் நாட்டில் நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம்.

ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களில் பெண்கள் குறிவைக்கப்படுவதை நிறுத்துங்கள் – பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சந்து

எங்கள் நாட்டின் பிரச்சனைகளைப் பற்றி அல்கொய்தா பேச வேண்டிய தேவை இல்லை. இதுபோன்றவர்கள் தான் நமது அமைதியை கெடுக்கிறார்கள். மாண்டியாவில் பிறந்த நாங்கள் இங்கு சகோதரர்களை போலவே வாழ்ந்து வருகிறோம். சில சம்பவங்கள் நடந்திருக்க கூடாது. இப்போது எங்களால் அமைதியான வாழ்க்கையை வாழ முடியவில்லை. எங்களின் அமைதியின்மைக்கு என்ன காரணம் என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும். நமது சமூகத்தில் மத நல்லிணக்கத்துக்கு தீங்கு ஏற்படுத்தியது யார் என்பதையும் அரசு கண்டறிய வேண்டும்.

‘ஹிஜாப் அணிந்த மாணவர்கள் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுத அனுமதி கிடையாது’ – கர்நாடக அரசு அறிவிப்பு

ஹிஜாப் அணிந்து சென்றதற்காக எனது மகளை கல்லூரி நிர்வாகம் தேர்வெழுத அனுமதிக்கவில்லை. முஸ்கான் அடுத்த வருடம் தனது படிப்பை தொடருவார். எங்கு ஹிஜாப் அனுமதிக்கப்படுகிறதோ அங்கு அவரை சேர்த்து நான் படிக்க வைப்பேன். ஜவாஹிரி காணொளி தொடர்பாக முஸ்கானிடம் பகிர்ந்துகொண்டேன். அதை கேள்விப்பட்டு அவளும் கலக்கமடைந்தாள். ஏற்கனவே தனது கல்வியை நினைத்து வருந்திக்கொண்டிருக்கும் முஸ்கானுக்கு இதுபோன்ற சம்பவங்கள் மேலும் அதிர்ச்சியைத் தான் கொடுக்கின்றன” என்று முகமது ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Source: Times of india

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது குறித்து சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் விளக்குகிறார். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்