Aran Sei

ஹிஜாப் அணிவது மாணவிகளின் கல்விக்கு இடையூறாக வரக் கூடாது – ராகுல் காந்தி கருத்து

மாணவிகள் ஹிஜாப் அணிவது அவர்களின் கல்விக்கு இடையூறாக வர அனுமதிப்பதன் வழியே அவர்களின் எதிர்காலத்தை நாம் அழிக்கிறோம் என்று ட்விட்டரில்காங்கிரஸ் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

மேலும் அதில், சரஸ்வதி அனைவருக்கும் அறிவைத் தருகிறாள். அவள் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி, ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளை ஆடைக் கட்டுப்பாடு விதியைக் காரணம் காட்டி வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இன்னும் அக்கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிவதற்கான கட்டுப்பாடு நீடிக்கிறது. இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாணவிகள் மனுத் தாக்கல் செய்துள்ளார்கள்.

மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதை எதிர்த்து குந்தாப்பூரில் உள்ள அரசுப் பல்கலைக் கழகக் கல்லூரியில் படிக்கும் 100 மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளனர்.

கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் அரசின் செயலானது இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்திலிருந்து ஓரங்கட்டுவதை சட்டப்பூர்வமாக்கும் முயற்சி என்று முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தெரிவித்திருந்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்