Aran Sei

‘படிக்காமல் ஃபார்வேட் செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா?’ – எஸ்.வி.சேகருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

டிக்காமல் ஏன் ஃபார்வேட் செய்தீர்கள் என்று எஸ்.வி.சேகரிடம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை பகிர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் தொடர்ந்த வழக்கை ஒரு வார காலத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

2018ஆம் ஆண்டு, பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக உறுப்பினருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலர் புகார் அளித்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகள் கீழும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் ஒரு பிரிவின் கீழும் மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தனக்கெதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவானது, இன்று (ஆகஸ்ட் 31), நீதிபதி நிஷாபானு முன்பாக விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில், அந்தப் பதிவை படிக்காமல் பகிர்ந்து விட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதற்கு நீதிபதி,  “படிக்காமல் ஏன் ஃபார்வேட் செய்தீர்கள்? அவ்வாறு ஃபார்வேட் செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மனுதாரர் தரப்பில் வழக்கை ரத்து செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. அதற்கு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மறுத்துள்ள நீதிபதி, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்:

‘தேர்தல் செலவிற்கு கட்சி கொடுத்த 13 கோடி – பாஜக வேட்பாளர்கள் கணக்கு காட்ட எஸ்.வி.சேகர் வலியுறுத்தல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்