Aran Sei

சார்தாம் யாத்திரைக்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்- அடுத்த கும்பமேளாவாக மாறும் அபாயமா?

த்தரகண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. மேலும், கொரோனா  விதிகளைப் பின்பற்றி யாத்திரையை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னர்  சார்தாம் யாத்திரை நடத்துவதற்கு விதித்த தடைஉத்தரவை நீக்கிய உத்தரகண்ட்  உயர்நீதிமன்றம், யாத்திரையை மீண்டும் தொடங்கவும்  குறிப்பிட்ட எண்ணிகையில் பக்தர்களைக் கோவிலுக்குள்  அனுமதிக்கவும் கூறியுள்ளது.

மேலும், கொரோனா பரிசோதனைச் சான்றிதழ் மற்றும் தடுப்பு மருந்து செலுத்தியதற்கான சான்றிதழும் அவசியம் என்றும் உயர்நீதிமன்றம்  பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, கேதார்நாத் யாத்திரைக்கு 8௦௦ பக்தர்களும், பத்ரிநாத் யாத்திரைக்கு 1200 பக்தர்களும், கங்கோத்ரிக்கு 600 பக்தர்களும், யமுனோத்திரிக்கு  400 பக்தர்களுக்கும் நாளொன்றுக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், கோவிலைச் சுற்றியுள்ள எந்தப் புனித ஊற்றுகளிலும் குளிக்க  பக்தர்களுக்கு  அனுமதிமறுக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல்துறைக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SOURCE:THE INDIAN EXPRESS 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்