Aran Sei

உத்தரகாண்ட்டில் உச்சமடையும் கொரோனா உயிரிழப்புகள் – பறிதவிக்கும் மக்கள்

டந்த ஏழு நாட்களில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில், 2.73 சதவீதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 0.8 சதவீதத்தையே அம்மாநில கொண்டுள்ளது.

கடந்த மாதம் ஏப்ரல் மாதத்தின் கடைசி ஏழு நாட்களில், நாடு முழுவதும் 22,121 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதில், 603 உயிரிழப்புகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் டெஹ்ராடூனை தலைமை இடமாக கொண்டு இயங்கும் சமூக மேம்பாட்டிற்கான சங்கம், கடந்த ஆண்டு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது முதல், அம்மாநில கொரோனா பரவலை ஆய்வு செய்து வருகிறது.

ஒரே நாளில் 30 லட்சம் பேர் பங்கேற்ற ஹரித்வார் கும்பமேளா : நான்கு நாட்களில் 1086 கொரோனா தொற்றுகள்

இதுகுறித்து அச்சங்கத்தை சேர்ந்த அனூப் நௌடியால் பேசுகையில், “நாட்டின் மொத்த மக்கள் தொகையில், உத்தரகாண்ட் மாநிலம் 0.8 சதவீதத்தையே கொண்டுள்ளது. ஆனால், கடந்த ஏழு நாட்களாக கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஏற்பட்ட உயிரிழப்புகளில்,  2.73 சதவீதம் இம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்