Aran Sei

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நெஞ்சை உலுக்குகின்றன -அமெரிக்க சட்டவல்லுனர்கள் உருக்கம்

கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது நெஞ்சை உலுக்கக்கூடியதாக உள்ளது என்று அமெரிக்க சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள டெமோகிராடிக் கோ-ஷேர் ஆப் இந்தியா வை சார்ந்த பிரெட் சேர்மன் “இந்த அசாதாரணமான சூழலில் இந்தியாவிற்கு எங்களின் உதவி தேவை” என்றும் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்பை குறைத்துக் கூறிய மத்திய சுகாதார அமைச்சர் – பதவி விலக கோரும் அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர்

மேலும், இந்தியாவிற்கான உதவியை அதிகபடுத்துவது தொடர்பாக தனது அமைப்பின் உறுப்பினர்களான ஸ்டீவ் சாபோட் மற்றும் ஜனநாயக அமைப்பின் துணைத் தலைவர் ரோ கன்னா, மற்றும் குடியரசுக் கட்சியின் துணைத் தலைவர் மைக்கேல் வால்ட்ஸ் ஆகியோருடன் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங்கை சந்தித்தும், அதிபர் ஜோ பைடனுக்கு கடிதமும் அனுப்பியுள்ளதாக என்டிடிவி செய்தி கூறுகிறது.

இந்தியாவில் நிலவும் சூழல்குறித்து தெரிவித்த ஜனநாயக அமைப்பின் துணைத் தலைவர் ரோ கன்னா, “இந்தியாவில் ஒரு பேரழிவு நடப்பதை நாம் கண் முன்னே பார்த்து வருகிறோம். புது தில்லியில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் கொரோனா தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார். அதிகமான இறப்புகளைத் தடுப்பதற்கான கருவிகளை உலகுக்கு வழங்குவதே நாம் செய்யக்கூடியது, “என்றும் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்