Aran Sei

மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் நோயாளி உயிரிழப்பு – மருத்துமனையை சேதப்படுத்திய நோயாளியின் உறவினர்கள்

டெல்லி சரிதா விஹார் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் நோயாளி உயிரிழந்ததை அடுத்து, நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனையை அடித்துச் சேதப்படுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக பேசிய மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர், ”கொரோனா நோயாளி உயிரிழந்ததை அடுத்து, அவரின் உறவினர்கள் தாக்கியதில் மருத்துவர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட ஏழு முதல் எட்டு பேர்வரை காயமடைந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

‘மக்களுக்கு படுக்கை வசதி இல்லை; நீதிபதிகளுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் படுக்கையா?’ – டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

”தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டிய நிலையில் இருந்த நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். எங்களிடம் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லை என்பத நாங்கள் தெரிவித்துவிட்டோம். நாங்கள்  நோயாளிக்கு ஆக்சிஜன் அளித்து அவசர சிகிச்சை அளித்தோம், இருந்தும் நோயாளி உயிரிழந்து விட்டார். உடனடியாக அவரின் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கத் தொடங்கினர்” என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, மருத்துவமனையில் மக்களுக்குப் படுக்கை இல்லாத நிலையில், ஐந்து நட்சத்திர விடுதிகளில் நீதிபதிகளுக்குப் படுக்கை வசதி ஏற்படுத்திய டெல்லி அரசு முடிவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்