Aran Sei

கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம் – மத்திய சுகாதார துறை அமைச்சர்

Image Credits: The Print

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை, இது தொடர்பாகப் பல தவறான புரிதல் உள்ளது என்றும் அவற்றை களைய வேண்டும் என்றும் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். “அனைத்தும் பாதுகாப்பிற்காகச் சரிபார்க்கப்பட்டுள்ளன” எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நாளை தொடங்கும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – எந்த மாவட்டத்தில்? எந்த இடத்தில்?

இன்று, கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட ஹர்ஷ் வர்தன் சென்றுள்ளார். அப்போது, டெல்லி செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த எந்த வதந்தியையும் நம்ப தேவையில்லை. அனைத்தும் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் போலியோ தடுப்பூசி போடப்பட்டபோது கூட இது போன்ற வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால் அதனை செலுத்த துவங்கியவுடன் அணைத்து மக்களுக்கும் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

அதன் செயல்திறன் குறித்து அனைவருக்கும் உறுதியளித்த டாக்டர் ஹர்ஷ் வர்தன் இதை பல தசாப்தங்களுக்கு முன்னர் இந்தியா அறிமுகப்படுத்திய போலியோ தடுப்பூசி பிரச்சாரத்துடன் ஒப்பிட்டுள்ளார். “தடுப்பு மருந்து மட்டும்தான் இல்லை, மற்றபடி அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது” என்று அவர் கூறியுள்ளார்.

அப்ப கோ கொரோனா; இப்ப நோ கொரோனா – மத்திய அமைச்சரின் அடுத்த ஆயுதம்

இந்த ஒத்திகை இந்தியாவில் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அசாம், ஆந்திரா, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களில் முதல் ஒத்திகை நடைபெற்றது. முந்தைய ஒத்திகையின் போது கோரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துவருகிறது. இது இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஒத்திகை துவங்கியுள்ளது. மத்திய அரசு அமைத்த வல்லுநர்கள் குழுவால் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்