Aran Sei

‘கர்நாடக அனைத்து மக்களுக்குமானது; பஜ்ரங் தளத்திற்கும் விஎச்பிக்கும் சொந்தமானதல்ல’ – எச்.டி.குமாரசாமி

ஸ்லாமிய வியாபாரிகள் மற்றும் ஹலால் இறைச்சி மீதான வலதுசாரி செயல்பாட்டாளர்களின் நிலைப்பாட்டை கடுமையாக சாடியுள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி, மதத்தின் நலன் என்ற போர்வையில் மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக, நேற்று (ஏப்ரல் 1), அம்மாநில தலைநகர் பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள எச்.டி.குமாரசாமி, “கர்நாடக மாநிலமானது அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. இது விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தளத்தின் சொத்து அல்ல. இந்த அமைப்புகள் இந்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக, அரசியல் கட்சியின் கைக்கூலிகளாக செயல்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஹலால் இறைச்சி விவகாரம் – இஸ்லாமிய வியாபாரியை தாக்கிய பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு

“ஒரு மதத்தைப் பாதுகாப்பது என்பது ஒருவரின் வாழ்வை சூறையாடுவது அல்ல. விஎச்பி அமைப்பானது ‘விஷ்வ வினாஷக் பரிஷத்’ ஆக கூடாது. பஜ்ரங் தள அமைப்பினர் அச்ச நோயை உண்டு பண்ணக் கூடாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாத காலத்துக்குள், வகுப்புவாத பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால், நடைபயணத்தில் ஈடுபடுவோம் என்று எச்.டி.குமாரசாமி மாநில பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source: IANS

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்