கொரோனா காலத்திலும் கட்டப்பட்டு வரும் சென்ட்ரல் விஸ்டா (புதிய நாடாளுமன்ற வளாகம்) கட்டும் திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் நாளை தீர்ப்பு வெளியாகவுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மொழிபெயர்ப்பாளர் அன்யா மல்ஹோத்ரா மற்றும் ஆவணப்பட இயக்குனர் சொஹைல் ஹாஷ்மி இணைந்து இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகவும், மே 17 இந்த மனு மீதான இறுதி வாதம் முடிவடைந்த நிலையில் வரும் மே 31 அன்று தீர்ப்பு வாசிக்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
இந்த மனுவில், கொரோனா தொற்று பரவிவரும் சூழலில் இந்த திட்டம் முக்கியமானதில்லை எனவே கட்டுமானப் பணிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என தெரிவித்திருந்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனுவின் விசாரணையின்போது சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை இரண்டாம் உலகப்போரின்போது கட்டப்பட்ட வதை முகாம்களோடு(“Auschwitz”) ஒப்பிட்டு “மரணத்தின் கோட்டை” என்று தெரிவித்திருந்ததாகவும், மேலும், தொழிலாளர்களுக்கான போதிய வசதிகள் ஏற்படுத்தித் தரவில்லை என்று மனுவில் கூறியிருந்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது.
சென்ட்ரல் விஸ்டா திட்டம் ஒரு கிரிமினல் விரயம் – ஒன்றிய அரசை விமர்சித்த ராகுல் காந்தி
இந்த மனுமீதான விசாரணையின் ஆஜரான ஒன்றிய அரசின் வழக்கறிஞர், மனுதாரர்கள் ஏற்கனவே இந்த திட்டத்தை எதிர்த்துள்ளனர். எனவே அவர்களுக்குத் தொழிலாளர்கள் மேல் அக்கறை இல்லை என்று தெரிவித்ததாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.