உத்தரகண்ட் மாநிலத்தில் சார் தாம் புனித யாத்திரைக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி அந்த யாத்திரையை நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 23 அன்று, சார்தாம் யாத்திரை நடத்தப்படவிருப்பதாக அறிவித்துள்ள மாநில அரசின் முடிவு “நடைமுறைக்கு ஒவ்வாத முட்டாள்தனமானது” எனக் கூறி, உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டுமென உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சார் தாம் புனித யாத்திரை வரும் ஜூலை 1 முதல் தொடங்கும். முதல் கட்டமாகச் சமோலி மாவட்டத்தைச் சார்ந்த பக்தர்கள் பத்ரிநாத்துக்கும், ருத்ரபிரயாக்கை சேர்ந்தவர்கள் கேதார்நாத் வரையிலும், உத்தரகாஷியைச் சார்ந்த பக்தர்கள் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள்” என்று அறிவித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும், பக்தர்கள் இதற்காக விண்ணப்பிக்க வேண்டுமெனவும், பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா உறுதிப்படுத்தப்படாதற்கான சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.