Aran Sei

‘லவ் ஜிகாத் வழக்கு : நிரூபிக்க ஆதாரம் இல்லை’ – அலகாபாத் உயர் நீதிமன்றம்

Image Credits: BBC

ட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் 2020-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நதீம் என்பவருக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம், உத்தரபிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய இளைஞர்கள், இந்து பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.

கறுப்புச் சட்டத்தில் நடக்கும் வேட்டை – லவ் ஜிகாத் என்ற பெயரில் 7 பேர் கைது

இதன்படி, திருமணத்திற்காகவோ அல்லது பலவந்தமாகவோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரபிரதேச அரசுச் சட்டம் இயற்றியது. இது ‘சட்டவிரோத மதமாற்ற தடுப்பு சட்டம் 2020’ என அழைக்கப் படுகிறது.

இச்சட்டத்தின் கீழ் நதீம் எனும் நபரின் மீது முசாபர்நகரில் உள்ள மன்சூர்பூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண்ணை மதம் மாற்றும் நோக்கத்துடன் திருமணம் செய்து கொள்ள முயன்றதாகக் கூறி இந்த வழக்கை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இதனை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நதீம் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி பங்கஜ் நக்வி மற்றும் விவேக் அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்துள்ளது.

உபி : லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் கைது

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.எஃப்.ஏ.நக்வி, இந்தச் சட்டங்களே அரசியலமைப்பின் வரம்பை மீறும் செயல் என்றும் இந்தச் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அணைத்துக் குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டுள்ளார்.

இந்தியத் தண்டனை சட்டத்தின் (ஐபிசி) 504, 506 மற்றும் 120 பி பிரிவுகளின் கீழும், சட்டவிரோத மதமாற்ற தடுப்பு சட்டம் 2020-ன் 3/5 பிரிவுகளின் கீழும் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்று நதீம் முறையிட்டுள்ளார்.

எஃப்ஐஆரின்படி, “மனுதாரர் அடிக்கடி புகார்தாரரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். புகார்தாரரின் மனைவியுடன் பழகி, மதம் மாற்றி அவரை மணந்துகொள்ள முயற்சித்துள்ளார்”.

`லவ் ஜிகாத் தடைச் சட்டம் நீதியை மீறும் செயல்’ – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

“புகார்தாரரின் மனைவியை மதம் மாற்றுவதற்காக மனுதாரர் வலுக்கட்டாய நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்பதை நிரூபிக்க ஆதாரம் எதுவும் இல்லை” என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

“பாதிக்கப்பட்டவர் (புகார்தாரரின் மனைவி) 18 வயதை கடந்தவர். தனது நலனைப் பற்றிப் புரிந்துகொள்ளக்கூடியவர். அவருக்கும் மனுதாரருக்கும் தனிமனிதஉரிமைக்கான அடிப்படை சுதந்திரம் உள்ளது. குறிப்பிட்ட வயதை கடந்தவர்கள் என்பதால் அவர்களுக்குத் தங்களுக்கு இடையே இருப்பதாகக் கூறப்படும் உறவால் ஏற்படும் விளைவுகளைக் குறித்துப் புரிதல் இருக்கும்” எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்