அசாம் மாநிலத்தில், வேட்பு மனுவில் மோசடி செய்த பாஜக அமைச்சரின் வெற்றியை, அசாம் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு, அசாம் மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், வாங்கெய் தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளராக ஒக்ரம் ஹென்ரியும், காங்கிரஸ் வேட்பாளராக யும்கம் எரபாத் சிங்கும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 4000 த்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஹென்ரி வெற்றிப் பெற்றார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அசாம் மாநிலத்திம் அமைச்சரவையில் இடம்பெற்றார்.
இந்தச் சூழலில், ”பாஜக வேட்பாளர் ஒக்ரம் ஹென்ரி தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவருடைய கல்வித் தகுதி போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அவருக்கெதிராக உள்ள குற்றவியல் வழக்குகளைத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து மறைத்துள்ளார்” என்று காங்கிரஸ் வேட்பாளர், யும்கம் எரபாத் சிங், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், தேர்தல் ஆணையத்திடம் போலியான தகவல்களைச் சமர்ப்பித்த பாஜக வேட்பாளர் ஹென்ரியின் வெற்றி செல்லாது என உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்தத் தொகுதியில் இரண்டாவதாக அதிக வாக்குகளைப் பெற்ற யும்கம் எரபாத் சிங், அந்தத் தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.