Aran Sei

ஜக்கியின் காவிரி அழைக்கிறது திட்டம் அரசின் திட்டமா ? – கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி

ஷா மையம் செயல்படுத்திய காவிரி அழைக்கிறது திட்டத்தைக் கர்நாடக அரசின் திட்டம் என்று சொல்லி நிதி திரட்டப்பட்டுள்ளதா ? என்று கர்நாடக உயர்நீதி மன்றம் நேற்று  (மார்ச் 8) கேள்வி எழுப்பியுள்ளது.

2019 ஆம் ஆண்டு எ.வி.அமர்நாதன் என்பவர் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் மனுவில், கர்நாடக அரசின் திட்டம் என்று சொல்லி ஈஷா யோகா மையம் தனது காவிரி அழைக்கிறது திட்டத்திற்கு 10,626 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

`ஈஷா விழாக்களை தடை செய்ய வேண்டும்’ –  வழக்கறிஞர் எம்.வெற்றிச்செல்வன்

அந்த மனுவில் உள்ள தகவலின் அடிப்படையில், காவிரி பாயும் கரையோரத்தில் 639 கிலோமீட்டர் நீளத்திற்கு 253 கோடி செடிகள் நடப்பட்டுள்ளன.  ஒரு செடிக்கு 42 ரூபாய் வீதம் 10626 கோடி ரூபாய் அரசின் பெயரைச் சொல்லி நிதி திரட்டுப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் அன்று இந்த மனுமீதான விசாரணையில் கர்நாடக உயர்நீதி மன்றம், ஈஷாவின் காவிரி அழைக்கிறது திட்டம், அரசின் திட்டம் என்று சொல்லி நிதி திரட்டப்பட்டுள்ளதா ? என்றும் கர்நாடக மாநில அரசு விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளதாக  தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பக்தர்கள் கையில் கோவில்’ என்பது ஜக்கியின் கருத்தல்ல, பாஜக கருத்து – கொளத்தூர் மணி

மேலும் அந்த மனுவில், காவிரி கரையோரம் அரசின் நிலத்தில் செடிகளை நடுவதற்கு எப்படி கர்நாடக அரசு அனுமதி அளித்தது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிலளித்துள்ள கர்நாடக அரசின் வழக்கறிஞர். இது அரசின் திட்டமல்ல என்று தெரிவித்துள்ளதாகவும் தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உழைப்பில்லாமல் ஆதியோகி சிலை உருவாகியிருக்குமா?: ஜக்கியின் கம்யூனிசம் குறித்த கருத்திற்கு பதில் – இரா.முருகவேள்

ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சூழலியல் பாதிப்பு ஏற்படும் வகையில் ஆஸ்ரமத்தை கட்டியிருப்பதாக சூழலியலாளர்கள் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்