Aran Sei

ஆனந்த் டெல்டும்டேவின் பிணை மனு மீது என்.ஐ.ஏ பதிலளிக்க வேண்டும்- மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

credits : the indian express

பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த் டெல்டும்டேவின் பிணை மனு என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தால்  நிராகரிக்கப்பட்டது குறித்து மூன்று வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென மும்பை உயர்நீதிமன்றம் தேசியப் புலனாய்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 12 அன்று ஆனந்த் டெல்டும்டேவின் பிணை மனுவானது  என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதியால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக  மும்பை உயர்நீதிமன்றத்தில் தெல்டும்டே     தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

ஆனந்த் தெல்டும்டே கடந்த 14, 2020 அன்று மும்பையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் சரணடைந்தார். அதன் பின்னர் அவர் மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார்.

 Source: The hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்