Aran Sei

ஒளிபரப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மீடியாஒன் தொலைக்காட்சி மேல்முறையீடு – தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம்

Credit : The Hindu

மீடியாஒன் மலையாள செய்தி சேனலின் ஒளிபரப்பு உரிமையை ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ரத்து செய்ததை உறுதி செய்து தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், அதற்கு எதிராக மீடியாஒன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சேனலின் உரிமையாளரான கோழிக்கோட்டைச் சேர்ந்த மத்யமம் பிராட்கேஸ்டிங் லிமிடெட், சேனலின் எடிட்டர் மற்றும் கேரள உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் இணைந்து தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவைக் கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ். மணிகுமார் தள்ளுபடி செய்துள்ளார்.

முன்னதாக, உரிமை ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்த தனி நீதிபதி, நிறுவனத்திற்கு எதிராக புலனாய்வு அமைப்புகள் அளித்த அறிக்கைகள் தீவிரமானவை என்றும்  பாதுகாப்பு மதிப்பீடு அளவுகளின் கீழ் உள்ளன என்றும் கூறியிருந்தார்.

மீடியாஒன் தொலைக்காட்சிக்குத் தடை: நீதிமன்றத்தில் மேல் முறையிடு – மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி

புலனாய்வு அமைப்புகளுடைய அறிக்கைகளின் அடிப்படையில் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் குழுவின் பரிந்துரைகள், ஆதாரங்களால் நியாப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என கூறியிருந்த மீடியாஒன் நிறுவனம், “அப்லோடிங் மற்றும் டவுன்லோடிங் உரிமைத்தை புதுப்பிப்பதற்கான வழிகாட்டுதலுக்கு தொடர்புடைய விதிகளின் படி புதிதாக பாதுகாப்பு அனுமதி வாங்க தேவையில்லை” என மனுவில் குறிப்பிட்டிருந்தது.

தேச விரோதம் என்று சொல்லும் அளவிற்கு எந்த நிகழ்ச்சியையும் ஒருபோதும் ஒளிபரப்பப்படவில்லை என வாதிட்ட மீடியாஒன், ”உண்மையில் புலனாய்வு அறிக்கையின் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளன. குழுவின் பரிந்துரைகள் அரசியலமைப்பிற்கு முரணானது. ஏனெனில் சேனலின் கருத்தைத் தெரிவிக்க எந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை” என கூறியிருந்தது.

பாஜகவை விமர்சித்ததால் தொலைக்காட்சி சேனலுக்கு தடையா? – மீடியா ஒன் தலைவரோடு நேர்காணல்

ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் சேனலில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. சேனலின் உரிமத்தை மறுப்பதற்கு பாதுகாப்பு உரிமத்தை அரசு காரணமாக பயன்படுத்துகிறது என கேரள உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

உளவுத்துறையின் பல்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே பாதுகாப்பு அனுமதியை உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது என ஒன்றிய அரசின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்