Aran Sei

அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது கேரளா காவல்துறையினர் வழக்கு – ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

மலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது கேரள காவல்துறையினர் தொடந்துள்ள வழக்கை ரத்து செய்ய கேரள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷை  கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக சாட்சியம் அளிக்க, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மிரட்டியதற்காக கேரள காவல்துறையினர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது  வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க, தங்கம் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளி ஸ்வப்னா சுரேஷை மிரட்டி அமலாக்கப் பிரிவு கட்டாயப்படுத்தியதாக ஆடியோ ஒன்று வெளியானது. இதை அடிப்படையாக வைத்து கேரள போலீஸார், முதல்வர் மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு அவதூறு பரப்ப முயன்றதாக சிஆர்பிசி 120-பி, 195-ஏ, 192, 167 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அமைப்புகளை, இனி சங் பரிவார் என அழைக்கப்போவதில்லை – ராகுல் காந்தி விளக்கம்

இந்நிலையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்த கேரள காவல்துறையினரின் செயல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

நீதிபதி வி.ஜி.அருண் பிறப்பித்த உத்தரவில், “வரும் 30-ம் தேதிவரை அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகக் கேரள போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அதேநேரத்தில் கேரள போலீஸார் விசாரணைக்குத் தடைவிதிக்க முடியாது. வழக்குப்பதிவையும் ரத்து செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

Source : Tamil Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்