Aran Sei

பிணை நீட்டிக்கக் கோரிய தெலுங்கு கவிஞர் வரவர ராவ் – ஏற்க மறுத்த மும்பை உயர்நீதிமன்றம்

credits:indianexpress.com

பிணையை நீட்டிக்க கோரிய தெலுங்கு கவிஞர் வரவர ராவ்வின் கோரிக்கையை ஏற்க மறுத்த மும்பை நீதிமன்றம், செப்டம்பர் 25 ஆம் தேதி தலோஜா சிறையில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 80 வயதான வரவர ராவ்விற்கு, ரூபாய் 50 ஆயிரம் கடன் பத்திரத்திற்கான நிபந்தனையின் அடிப்படையில் ஆறு மாத பிணையை, பிப்ரவரி 22 ஆம் தேதி, நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே மற்றும் மணிஷ் பட்டேல் அடங்கிய அமர்வு  வழங்கியது.

கடன் பத்திரங்கள் பெறுவதில் இருந்து ஏற்பட்ட காலதாமதத்தினால் மார்ச் ஆம் தேதி விடுவிக்கப்பட்ட வரவர ராவ், கிழக்கு மலாட் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தார்.

ஆறு மாத பிணையின் காலம் செப்டம்பர் 5 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், பிணையை நீட்டிக்க வேண்டும் மற்றும் பிணை காலத்தில் ஹைதராபாத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என வரவர ராவ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

பல்வேறு மருத்துவ உபாதைகள் காரணமாக, நாளொன்றுக்கு 13 மருந்துகளை எடுத்து வருவதால், பிணையை நீட்டிக்கக் கோரிய வரவர ராவ், தொடர்ச்சியான பரிசோதனை மற்றும் மேற்பார்வை தேவைப்படுகிறது என்றும், அறிகுறியற்ற பார்கின்சன் நோய், நடுக்கவாதம் மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான இயக்க பிரச்னைகள் இருக்கிறது என்றும், ஜஸ்லோக் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் அளித்திருக்கும் அறிக்கையை அவர் மேற்கோள் காட்டினார்.

இந்த வழக்கினை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில், ”தலோஜா சிறை அதிகாரிகள், சிறை விதிகளை பயன்படுத்தி சிறை கையேட்டின்படி சிறந்த மருத்துவ வசதிகளை வழங்கி வருகின்றனர். மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் மேற்பார்வையில், நீதிமன்ற காவலில் அறுவை சிகிச்சைகள் செய்யப்படலாம். எனவே ஜாமீனை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்