Aran Sei

‘இந்துக்களை மதமாற்றம் செய்பவர்களின் தலையை வெட்டுங்கள்’ – பாஜக தலைவர்கள் முன்னிலையில் பேசிய இந்துத்துவ தலைவர்

த்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்ததில், இந்துக்களை கிறித்துவத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட பேரணியில் மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களின் தலையை வெட்ட வேண்டும் என சுவாமி பரமாத்மானந்த்  பேசியுள்ளார்.

பாஜக மாநில தலைவர்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், மதமாற்றத்தில் ஈடுபடும் சிறுபான்மையினரை குறி வைத்துக் கொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

”நான் ஒரு துறவி, நான் எதற்கும் கவலைப்படுவதில்லை. நான் தெளிவாக சொல்கிறேன். ராம்விச்சார் ஜியும் இதையே கூறியுள்ளார். ஆனால், அவர் தெளிவாக சொல்லவில்லை. அனைவரும் வீட்டில் லத்தி வைத்திருங்கள். எங்கள் கிராமங்களில் மக்கள் கை கோடாரிகளை வைத்துள்ளார்கள். அவர்கள் ஏன் அதை வைத்திருக்கிறார்கள் தெரியுமா?. மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் தலையை வெட்டத் தான். ஒரு துறவியாக இருந்து கொண்டு, நான் வெறுப்பை பரப்புகிறேன் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆனால் சில நேரங்களில் தீயை பற்ற வைக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் வீடு, தெரு, அக்கம்பக்கம், கிராமம் என யார் வந்தாலும் அவர்களை மன்னிக்க வேண்டாம்” கூறியுள்ளார்.

மேலும், ”கிறித்துவத்திற்கு மாறியவர்களிடம் ஒன்றை கூறிக் கொள்கிறேன். நீங்கள் ஏன் கிணறுக்கு ஆசைப்பட்டு கடலை விட்டுச் செல்கிறீர்கள். முதலில் அவர்களுடன் மரியாதையாக பேச வேண்டும் என்று விரும்புகிறேன். ரோகோ (நிறுத்துங்கள்), பிர் டோகோ (எதிர்ப்பு தெரிவிப்பேன்), பிர் தோகோ (இறுதியில் சுட்டு விடுவேன்)” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நூற்றுக்கணக்கான பார்வையாளர்களிடம் கிறுஸ்துவர்களின் தலையை வெட்டுமாறு அவர் கோரினார். அவர் அவ்வாறு பேசும்போது சத்தீஸ்கர் மாநில பாஜகவின் முக்கியத் தலைவர்கள் ராம்விசர் நேதம், நந்த் குமார் சாய், பாஜக செய்தித் தொடர்பாளர் அனுராஜ் சிங் தியோ ஆகியோர் மேடையில் இருந்தனர்.

சுவாமி பரமாத்மானந்த் பேசிய தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகுறித்து அறிய சுர்குஜா பகுதி காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ள முயன்றும் அவரிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்