Aran Sei

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் – விவாதிக்க மறுத்த மாநிலங்களவை தலைவர்

சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களைப் பேசிய சாமியார் யதி நரசிங்கானந்த் பற்றி எதிர்க்கட்சியான காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளைப் பற்றிப் பேசுவதற்கான அனுமதியை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுத்துள்ளார்.

‘இந்தியாவுக்கு ஒரு இஸ்லாமியர் பிரதமராக வந்தால் 40% இந்துக்கள் கொல்லப்படுவர்’ – சாமியார் யதி நரசிங்கானந்த் மீண்டும் வன்முறை பேச்சு

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் இணையதள ஊடகங்களில் பத்திரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து விதி 267 இன் கீழ் நோட்டீஸ் அளித்துள்ளதாக மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.

“மல்லிகார்ஜுன் கார்கே எழுப்பும் கேள்விகளை விதி 267 இன் வரம்புக்குள் வராது. ஆகவே அவர் தினமும் நோட்டீஸ் கொடுத்தால் கூட இந்த விதியின் வரம்பிற்குள் வரவில்லையென்றால் அனுமதிக்க மாட்டேன்” என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

மேலும், சாமியார் யதி நரசிங்கானந்த் பேசியதாக மல்லிகார்ஜுன் கார்கே கூறியதையும் மாநிலங்களவை குறிப்புகளில் இருந்து நீக்கவும் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்து மகாபஞ்சாயத்து: இஸ்லாமிய பத்திரிக்கையாளர்களை ஜிகாதி என கூறியதோடு, 7 பத்திரிக்கையாளர்களை தாக்கிய வலதுசாரியினர்

“இந்தியாவுக்கு ஒரு இஸ்லாமியர் பிரதமராக வந்தால் 40 விழுக்காடு இந்துக்கள் கொல்லப்படுவார்கள். ஆதலால் இந்துக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்களை எடுக்க வேண்டும்” என்று வடமேற்கு டெல்லியின் புராரி மைதானத்தில் நடைபெற்ற இந்து மகாபஞ்சாயத்தில் சாமியார் யதி நரசிங்கானந்த் பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Source : newindianexpress

ராமராஜ்ஜியம் குறித்து கலந்துரையாடல்… மேலும் தெரிந்துகொள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்