Aran Sei

ஹரித்வாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – யதி நரசிங்கானந்த் சரஸ்வதி மீது வழக்குப் பதிவு

த்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மூன்று நாள் மத தர்ம நாடாளுமன்றம் (தர்ம சன்சத்) நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிகழ்வை ஒருங்கிணைத்த யதி நரசிங்கானந்த் சரஸ்வதி மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

யதி நரசிங்கானந்த் சரஸ்வதி மீது உபா சட்டம் பதியப்பட வேண்டும் என்றும் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன. இந்நிலையில் யதி நரசிங்கானந்த் சரஸ்வதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையர்களை அச்சுறுத்தியதாக அவர் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே உள்ளன.

ஹரித்வாரில் நடைபெற்ற் நிகழ்வில், இஸ்லாமியர்களுக்கு எதிரான போர் செய்ய அழைப்பு விடுத்துள்ள யதி நரசிங்கானந்த் சரஸ்வதி, 2029-ல் ஒரு இஸ்லாமியர் பிரதமராக வருவதைத் தடுக்க இந்துக்கள் ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

‘சுல்லி டீல்ஸ்’: இணையத்தில் பதிவேற்றப்படும் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் – பெண் பத்திரிகையாளர் வழக்குப்பதிவு

“வலிமையான ஆயுதங்களுடன் யுத்தத்திற்கு வருபவர்கள் வெல்வார்கள். சாஷ்ட்ரமேவ ஜெயதே (ஆயுதங்கள் வெல்லட்டும்). நாங்கள் எங்கள் தர்மத்திற்காக உயிரையும் கொடுப்போம். தேவைப்பட்டால், அதற்காக கொலையும் செய்வோம்” என்று கூறி, பார்வையாளர்களை உறுதிமொழி எடுக்க கோரியுள்ளார்.

அதே நிகழ்வில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை குறிப்பிட்டு பேசியுள்ள பாட்னாவைச் சேர்ந்த சாமியாரான தரம்தாஸ் மகராஜ், “நான் துப்பாக்கி வைத்துள்ள எம்பியாக நாடாளுமன்றத்தில் இருந்திருக்க வேண்டும். நாதுராம் கோட்சேவாகி, ஆறு தோட்டாக்களையும் அவருக்குள் சுட்டு இறக்கியிருப்பேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு சாமியார்கள் தெரிவித்துள்ளனர். ஹரித்வார் மக்களும் உணவகங்களும் கிறிஸ்துமஸைக் கொண்டாடினால், ‘அவர்களின் சொத்துக்களுக்கு அவர்களே பொறுப்பு’ என்று ஆனந்த் ஸ்வரூப் மகாராஜ் சாமியார் ஒருவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

ஆக்ஸ்பாம் இந்தியா உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெறுவது நிறுத்திவைப்பு – ஒன்றிய அரசு தகவல்

சிறுபான்மையினருக்கு எதிராக பேசியதற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இவ்விவகாரத்தில் நீதித்துறை தலையிடக்கோரி உச்ச நீதிமன்றத்தின் எழுபத்தாறு வழக்கறிஞர்கள், இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கும் கடிதம் எழுதி இருந்தனர்.

இவ்வெறுப்பு பேச்சுகள் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் என்று ஆயுதப் படைகளின் முன்னாள் தலைமைத் தளபதிகள் ஐந்து பேரும் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்