Aran Sei

தர்ம சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு: சட்டப்படி தண்டிக்க ஆர்எஸ்எஸ் தலைவர் கோரிக்கை

ரித்துவாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, இத்தகைய ஆத்திரமூட்டும் மற்றும் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசும் அனைவரையும் பாரபட்சமில்லாமல் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் இன் மூத்த தலைவரும், முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்சின் நிறுவனருமான இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு எதிராக மற்றொரு பிரிவினர் வெறுப்பு பிரச்சாரத்தைத் தூண்டாமல் தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் இந்திரேஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

எந்தவொரு சாதி,மத, இன மக்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை வெளியிடுவதற்குப் பதிலாக, நாடு மக்களின் வளர்ச்சி மற்றும் சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்க உதவ வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தர்ம சன்சத்: ‘அரசியலமைப்பு மற்றும் தேர்தல் விதிகளை மீறும் செயல்’ – தலைமைத் தேர்தல் ஆணையருக்கு முன்னாள் கடற்படைத் தலைவர் கடிதம்

“மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சித்தாந்தத்தைக் குற்றம் சாட்டும் காங்கிரஸையும் மற்ற எதிர்க்கட்சிகளைக் கண்டிக்கிறேன். மேலும் அவர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சுமத்தி வருகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் க்கு எதிராக “அடிப்படையற்ற மற்றும் ஆதாரமற்ற” முறையில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் “கொடூரமான” வெறுப்புப் பேச்சுதான் என்றும் இவர்கள் மீது ஏன் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“காந்தியைக் கொன்றது இந்துத்துவவாதிகள் என்று கூறுவதும் வெறுப்பு பேச்சுதான். ஒரு சமூக பிரிவினர் அல்லது ஒரு அமைப்புக்கு எதிராக வெறுப்பை உருவாக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் “வெறுப்பு பேச்சுகளாக” கருதப்பட வேண்டும்” என்று இந்திரேஷ் குமார் வாதிட்டுள்ளார்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்